×

ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத் தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் ரியல் டவர் என்ற வணிக வளாகம் உள்ளது. இங்கு பல்வேறு அலுவலகங்கள், கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில், இந்த வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள செல்போன் டவரிலும் பரவியது. தகவலறிந்து மயிலாப்பூர் மற்றும் தேனாம்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட தீயணைப்பு அலுவலகங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

The post ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Rayapet ,Chennai ,Rayapet, Chennai ,Shopping Campus ,Rayapatte ,Dinakaran ,
× RELATED சென்னையிலும் வருகிறது பசுமை பந்தல்!